வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (09:51 IST)

மக்களுக்கு பிஸ்கெட்டுகளை தூக்கி எறிந்த குமாரசாமியின் சகோதரர் : சர்ச்சை வீடியோ

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள கர்நாடக மக்களுக்கு பிஸ்கெட்டுகளை தூக்கி எறிந்த முதல்வர் குமாரசாமியின் சகோதரர் செயல் கண்டத்திற்கு உள்ளாகியுள்ளது.

 
கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை செய்து வருகிறது. அதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால், பல்வேறு கிராமங்கள் வெள்ளதால் சூழப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை 11 பேர் உயிழந்துள்ளனர். மழை வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்கள் தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில், அவர்களை சந்தித்து உதவிகள் வழங்க கர்நாடக முதல்வர் குமாரசாமியின் சகோதரரும், அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா நேற்று முகாமுக்கு சென்றார். அப்போது, நாய்களுக்கு ரொட்டி துண்டுகளை தூக்கி விசுவது போல, மக்களுக்கு அவர் பிஸ்கெட் பாக்கெட்டை தூக்கி வீசினார். பசியில் வாடிய சிலர் அதை பெற்றுக்கொண்டாலும், சுயமரியாதையுள்ள பலரும் அதை நிராகரித்தனர். அமைச்சரின் செயலுக்கு கண்டனமும் தெரிவித்தனர்.
 
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது. இதைக்கண்ட பலரும் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.