புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2020 (10:52 IST)

3 மாதங்களுக்கு EMI கட்டத் தேவையில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு !

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டடதை அடுத்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் பல சலுகைகளை மக்களுக்கு அறிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் சற்று முன்னர்  செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவர் பல சலுகைகளை மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளார். அப்போது பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.

சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ள சலுகைகள்
 
  • மூன்று மாதங்களுக்கு எந்தவிதமான மாதத்தவணைகளும் கட்டத் தேவையில்லை
  • மேலும் தனியார் வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ வட்டிவிகிதம் 5.1 ல் இருந்து 4.4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • வாகனங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.
  • ரெப்போ வட்டிக் குறைந்ததால் மாதத்தவணை தொகை குறைய வாய்ப்பு