செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (14:02 IST)

குடியரசு தின ஊர்தி அணிவகுப்பு! – உத்தர பிரதேசம் முதலிடம்!

இந்திய குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட மாநில அலங்கார ஊர்திகளில் உத்தர பிரதேச மாநிலத்தின் ஊர்தி முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்திய குடியரசு தினம் கடந்த ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் டெல்லியில் குடியரசு தின பேரணி நடைபெற்றது. இதில் பேரணியில் இடம்பெற மகராஷ்டிரா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநில அலங்கார வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநில அலங்கார வாகனம் ராமர் கோவில் மாதிரியால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட அலங்கார வாகனங்களின் தரவரிசையை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் உத்தர பிரதேச மாநில ஊர்தி முதல் இடத்தை பிடித்துள்ளது. கர்நாடக ஊர்தி இரண்டாவது இடத்தையும், மேகாலயா ஊர்தி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. மக்கள் மனம் கவர்ந்த ஊர்தியாக மகாராஷ்டிராவின் ஊர்தி தேர்வாகியுள்ளது.