Daily Horoscope
✕

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை..

Written By Arun Prasath
Updated: வியாழன், 5 டிசம்பர் 2019 (13:24 IST)
ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிலிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) ஆகியவை குறித்தான மாற்றங்கள் ரிசர்வ் வங்கியின் நிதி வங்கி கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கூட்டம் தற்போது மீண்டும் கூடியது. இதில் 5.15 % ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அதே போல் 4.90 % ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்திலும் எந்த மாற்றமும் இல்லை எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு மற்றும் வாகன கடன்களின் வட்டியில் எந்த மாற்றமும் இருக்காது. கடந்த ஓராண்டு மட்டும் ரெப்போ விகிதம் தொடர்ந்து 5 முறை 1.35 சதவீதம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

எனக்கும், என் மனைவிக்கும் 600 கோடி சொத்து இருக்கு!.. நீதிமன்றத்தில் விஜய் தகவல்..

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!.. பதிவான வாக்குகள் எவ்வளவு?

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்!.. சிறப்பு தரிசன டிக்கெட் புக்கிங் அப்டேட்...

எரிபொருள் விலை எதிரொலி!... விமான கட்டணம் உயர்வு!...

AI, கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்களில் நுழைகிறது ஜியோ.. ஜியோபிரைன்' என்ற சொந்த AI தளம்..

அடுத்த கட்டுரையில்
Show comments