பீகாரில் வெள்ளம் ஏற்பட எலிகள் தான் காரணம்; கண்டறிந்த பாஜக அமைச்சர்
பீகாரில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு எலிகள்தான் காரணம் என பாஜக எம்.பி. ராஜிவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
வட மாநிலங்களில் கடந்த ஒரு மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அசாம், பீகார், மும்பை உள்ளிட்ட பகுதியில் வெள்ளத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். பீகார் வெள்ளிப்பெருக்கு ஏற்பட்டதற்கு எலிகள்தான் காரணம் என பீகார் பாஜக எம்.பி. ராஜிவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பீகார் மாநிலத்தில் 21 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏரிக்கரையோரம் வாழும் மக்கள் வீசும் உணவு பொருட்களை சாப்பிட எலிகள் வருகின்றன். அந்த எலிகள் ஏரிக்கரைகளை தோண்டி பாதிப்பை ஏற்படுத்திவிட்டன். இதனால் கரைகள் உடைந்து வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து விட்டது.
எலிகள் ஏற்படுத்திய குழிகளை கண்டுபிடித்து அவற்றை மூடி, 3 நாட்களில் ஏராளமான பகுதிகள் வெள்ள நீரில் மூழ்குவதில் இருந்து காப்பாற்றினோம் என்றார்.