1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 19 ஏப்ரல் 2018 (13:04 IST)

படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது - போட்டு உடைத்த ரம்யா நம்பீசன்

பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கும் இருக்கிறது என நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.

 
சமீபகாலமாக, சினிமாவில் பட வாய்ப்பிற்காக தங்களை படுக்கைக்கு அழைத்தனர் என பல நடிகைகள் புகார் கூறி வருகின்றனர். தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இந்த விஷயத்தை பூதாகரமாக்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக பல முன்னாள் நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூட இந்த விவகாரம் ஆந்திர சினிமா உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகை ரம்யா நம்பீசன் “திரையுலகில் நடக்கும் மோசமான சம்பவங்கள் பற்றி என் சக நடிகைகள் கூறுவதை நான் மறுக்கவில்லை. அது உண்மைதான். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த தொல்லைக்கு நான் ஆளாகவில்லை. ஆனால், என் தோழிகள் இதை சந்தித்துள்ளனர் என்பது வெட்கமாக இருக்கிறது. இதுபற்றி நடிகைகள் தைரியமாக பேச வேண்டும்” என அவர் கூறினார்.