மோடியின் புகைப்படத்திற்கு ரூ.25,000 கொடுக்கும் நடிகை ரம்யா!!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடிகை ரம்யா தனது பேஸ்புக் பக்கத்தில் மோடியை விமர்சித்துள்ளார்.
வெள்ளம் பாதித்த இடங்களில் மோடியின் புகைப்படத்தை காட்ட இயலுமா? என நடிகை ரம்யா கேட்டுள்ளார். அவ்வாறு காண்பித்தால் ரூ.25,000 தருவதாவும் அறிவித்துள்ளார்.
அவர் பதிவிட்டதாவது, அசாம், குஜராத் அல்லது பீகாரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட எந்த இடத்திலாவது மோடி இருப்பதுபோல புகைப்படங்களை காண்பியுங்கள் பார்ப்போம், அதுவும் போட்டோஷாப் இல்லாமல் காட்டுங்கள் என பதிவிட்டுள்ளார்.