வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 10 ஜனவரி 2024 (14:28 IST)

நிறைய பிள்ளைகள் பெற்று கொள்ளுங்கள்.. அனைவருக்கும் மோடி வீடு கட்டி கொடுப்பார்: பாஜக அமைச்சர்

நிறைய பிள்ளைகளை பெற்றுக் கொள்ளுங்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வீடு கட்டி கொடுப்பார் என ராஜஸ்தான் மாநில பழங்குடியின வளர்ச்சி துறை அமைச்சர் பாபுலால் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் பாஜக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து உள்ள நிலையில் பழங்குடியின வளர்ச்சித் துறை அமைச்சர் பாபுலால் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். 
 
அப்போது  ஒரு குடிமகன் பசி மற்றும் வீடு இல்லாமல் இருக்க கூடாது என்றும் இதுவே பிரதமர் மோடியின் கனவு என்றும் நீங்கள் எத்தனை பிள்ளைகள் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளுங்கள் அவர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வீடு கட்டி கொடுப்பார் என்றும் வேறு என்ன உங்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்றும் தெரிவித்தார் 
 
 அமைச்சர் பாபுலாலுக்கு இரண்டு மனைவிகள் மூலம் நான்கு மகன்கள் நான்கு மகள்கள் என மொத்தம் எட்டு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran