1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 5 நவம்பர் 2023 (09:59 IST)

தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும் அமலாக்கத்துறைக்கும் தான் போட்டி: ராஜஸ்தான் முதல்வர்..!

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த மாதம் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. 
 
இந்த நிலையில் ராஜஸ்தான் முதல்வர்  அசோக் கெலாட் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது ராஜஸ்தான் மாநில தேர்தலை பொருத்தவரை காங்கிரஸ் கட்சிக்கும் அமலாக்க துறைக்கும் தான் போட்டி என்று கூறினார். 
 
ராஜஸ்தானில் எங்குமே பாஜக இல்லை என்றும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் மட்டுமே  அரசியல் கட்சிகளை பயமுறுத்தி வருகின்றனர் என்றும் இந்த அமைப்புகளை பயன்படுத்தி ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு சதி செய்கிறது என்றும் கூறியுள்ளார். 
 
இந்த நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று எடுத்த கருத்துக்கணிப்பில் ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக தான் ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளது.
 
Edited by Siva