புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 11 ஜூன் 2020 (09:44 IST)

ராஜஸ்தானில் கவிழ்கிறதா காங்கிரஸ் அரசு? கூவத்தூர் பாணியில் எம்.எல்.ஏக்கள் ரிசார்ட்டில் அடைப்பு

ராஜஸ்தானில் கவிழ்கிறதா காங்கிரஸ் அரசு?
கடந்த சில ஆண்டுகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகள் திடீர் திடீரென கவிழ்ந்து இன்னொரு கட்சி ஆட்சியைப் பிடிப்பது என்பது பல மாநிலங்களில் நடந்து வருகிறது. சமீபத்தில் கூட கர்நாடக மாநிலத்தில் இதேபோல் ஆட்சி மாறியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரம் பேசப்பட்டு வருவதாக அம்மாநில முதல்வரே தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இதுகுறித்து கூறியபோது காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு ரூபாய் 25 கோடி வரை பாஜக பேரம் பேசி வருவதாகவும் முதல் கட்டமாக 15 கோடியை கொடுத்து விட்டதாகவும் தனது ஆட்சியைக் கவிழ்க்க பாஜக பணத்தை தண்ணீராய் செலவு செய்து வருவதாகவும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் 90 பேர்கள், அங்கு உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் பிரச்சினை காரணமாக அவர்களை யாரும் தொடர்பு கொள்ள முடியாத வகையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன 
 
ஆனால் இந்த தகவலை பாஜக மறுத்துள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க எந்த வித நடவடிக்கையும் பாஜக எடுக்கப் போவதில்லை என்றும் அந்த ஆட்சி தானே கவிழ்ந்துவிடும் என்றும் பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர் இதனால் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது