1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 14 டிசம்பர் 2017 (17:00 IST)

ரூ.58,000 கோடி; ராஜமெளலி ப்ளான்: ஆந்திரா தலைநகரின் ப்ளூ பிரிண்ட் ரெடி...

2014 ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிந்தது. அப்போதில் இருந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா இரண்டு மாநிலத்திற்கும் ஹைதராபாத் தலைநகராக செயல்பட்டு வருகிறது.
 
இன்னும் 7 வருடத்தில் ஹைதராபாத் தெலுங்கானாவின் தலைநகராக மாறிவிடும். இதன் காரணமாக தற்போது அமராவதி ஆந்திராவின் தலைநகராக மாற இருக்கிறது. இன்னும் இரண்டு வருங்களில் அமராவதி நகரம் வடிமைத்து முடிக்கப்படும் என்று முதல்வர் சந்திர பாபு நாயுடு கூறியுள்ளார். 
 
ஆந்திர பிரதேசத்தின் தலைநகராக போகும் அமராவதி நகரத்தை பாகுபலி இயக்குனர் ராஜமௌலி வடிவமைக்கிறார். இதற்கான ப்ளூ பிரிண்ட் தற்போது தயாராகி இருக்கிறது. பாகுபலி படத்தில் வேலை பார்த்த இன்னும் சிலரும் இந்த பணியில் ஈடுபட உள்ளனர்.


 
அமராவதியை உருவாக்க மொத்தமாக ரூ.58,000 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த செலவில் ஊரக வளர்ச்சி இயக்ககம் மற்றும் உலக வங்கி இணைந்து ரூ.14,000 கோடி கொடுக்கும். மேலும் 14,250 கோடி பணம் அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பில் வழங்கப்படும். 
 
மீதம் உள்ள பணம் அனைத்தும் பல்வேறு இடங்களில் வாங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக முக்கிய கூட்டம் ஒன்று, ஹைதராபாத்தில் நடைபெற்றது. அமராவதி நகரம் உலகிலேயே சிறந்த ஐந்து நகரங்களில் ஒன்றாக இருக்கும். மேலும் இந்தியாவின் நம்பர் 1 நகராக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.