செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 19 மார்ச் 2018 (15:54 IST)

தேசிய கொடி போர்த்தும் அளவுக்கு என்ன செய்தார் ஸ்ரீதேவி? ராஜ்தாக்கரே

இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி கடந்த மாதம் துபாயில் எதிர்பாராத வகையில் குளியல் தொட்டியில் விழுந்து மரணம் அடைந்தார். அவரது மரணத்தால் திரையுலகினர் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். அவருடைய இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்

மேலும் மகாராஷ்டிர அரசு, அவரது உடலுக்கு மூவர்ண தேசிய கொடியை போர்த்தி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய உதவியது. இந்த நிலையில் தேசிய கொடி போர்த்தும் அளவுக்கு ஸ்ரீதேவி நாட்டுக்கு என்ன செய்தார்? என்ற கேள்வியை  மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்ரே தற்போது எழுப்பியுள்ளார். இந்த கேள்வியை ஸ்ரீதேவி அடக்கம் செய்த அன்றே பலர் எழுப்பியபோது அவர் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளதால் தேசிய கொடி போர்த்தப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் இந்த விளக்கத்தை ராஜ்தாக்கரே ஒப்புக்கொள்ளவில்லை. நேற்று மும்பையில் நடைபெற்ற மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராஜ் தாக்ரே மூவர்ணக்கொடி போர்த்தும் அளவிற்கு அவர் நாட்டுக்காக என்ன செய்தார்? தியாகிகளுக்கு மட்டுமே போர்த்த வேண்டிய மூவர்ண கொடி ஒரு நடிகைக்கு போர்த்தியது ஏன்? என்று சரமாரியாக அரசுக்கு கேள்விக்கணைகளை எழுப்பியுள்ளார். இதற்கு மகாராஷ்டிர அரசு என்ன பதில் கூறவுள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.