பண்டிகை காலம்.. செம கூட்டம்.. செம வசூல்..! – ரயில்வே-க்கு உயர்ந்த வருவாய்!
கடந்த 6 மாதங்களாக ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் கடந்த ஆண்டை விட ரயில்வே அதிகமான வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் இந்திய ரயில்வேயின் பல நூறுக்கணக்கான ரயில்கள் பல வழித்தடங்களில் இயங்கி வருகின்றன. கடந்த சில ஆண்டுகள் முன்னதாக கொரோனா காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
அதன்பின்னர் ரயில்சேவைகள் தொடங்கப்பட்டாலும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இடம்பெறவில்லை. ரயிலில் செல்ல முன்பதிவு கட்டாயம் என்ற நிலையே இருந்தது. கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்த நிலையில் ஒருசில ரயில்களில் மட்டும் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டன.
தற்போது கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்துவிட்ட நிலையில் வழக்கம்போல அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் பயணிகள் கூட்டமும் அதிகரித்துள்ளது.
கடந்த 6 மாதங்களில் முன்பதிவில்லா டிக்கெட் மூலமாக மட்டும் ரயில்வேக்கு ரூ.6,515 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரயில்வேயின் முன்பதிவில்லா டிக்கெட் மூலமான வருவாய் ரூ.1,086 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Edited By: Prasanth.K