திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 28 ஜனவரி 2021 (20:44 IST)

இரயிலில் உணவு சேவை : ஐ.ஆர்.சி.டி.சி-க்கு மீண்டும் அனுமதி!

இரயிலில் உணவு சேவை : ஐ.ஆர்.சி.டி.சி-க்கு மீண்டும் அனுமதி!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ரயில்களில் உணவு சேவை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஐஆர்சிடிசி ரயில்களில் உணவு வழங்கும் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் குறிப்பிட்ட ஒருசில ரயில் நிலையங்களில் மட்டும் உணவு வழங்கும் சேவையை மீண்டும் தொடங்க ஐஆர்சிடிசிக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கொரோனா பாதிப்பு கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவில் இருந்த காரணத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ரயில்கள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதலில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன 
 
இருப்பினும் பயணிகளுக்கு உணவு வழங்கும் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி ஒரு சில குறிப்பிட்ட நிலைகளில் மட்டும் உணவு சேவை வழங்கும் வழங்க ஐஆர்சிடிசிக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது