1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 26 மே 2018 (16:50 IST)

மோடியின் ரிபோர்ட் கார்டை வெளியிட்ட ராகுல்...

மத்தியில் ஆட்சி அமைந்துள்ள பாஜக அரசு நேற்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது. இதை பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடினர். 
 
இது குறித்து மோடி கூறியது பின்வருமாறு, பாஜக அரசு மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். மக்களின் ஆதரவால்தான் மத்திய அரசு வலிமையாக செயல்பட முடிகிறது. இதே உத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5வது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் என கூறியுள்ளார். 
 
இந்நிலையில் மோடியின் நான்கு ஆண்டு ஆட்சிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில், மோடி அரசின் ரிப்போர்ட் கார்டை வெளியிட்டுள்ளார்.
 
அதில் 4 வருட ரிப்போர்ட் கார்ட் என கூறிப்பிட்டு, விவசாயம், வெளிநாட்டு கொள்கை, எரிபொருள் விலை, வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்றவற்றை குறிப்பிட்டு இதில் எல்லாம் ஃபெயில் என கூறியுள்ளார். 
 
அதேநேரம், கோஷங்களை உருவாக்குவது, சுய விளம்பரம் ஆகியவற்றில் இந்த அரசுக்கு ஏ பிளஸ் எனப்படும் உச்சபட்ச கிரேடை வழங்கியுள்ளார். யோகாவில் பி நெகட்டிவ் என கூறி கிண்டல் செய்துள்ளார்.