1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 29 மே 2018 (12:46 IST)

பாஜகவினர் கவலைப்பட வேண்டாம்; திரும்பி வந்துவிடுவேன்: ராகுல் கிண்டல்!

சோனியா காந்தி உடல்நல குறைவு காரணமாக, சிகிச்சை பெறுவதற்கு வெளிநாடு சென்றுள்ளார். இவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சென்றுள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
அதில் அவர் கூறியிருப்பதாவது, என்னுடைய அம்மா சோனியா காந்திக்கு ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறேன். சில காலம் இந்தியாவில் இருக்க மாட்டேன். 
 
பாஜக சமூக வலைதள பிரிவு ட்ரோல் நண்பர்களுக்கு: நான் வெளிநாடு செல்வதால் கவலைப்பட வேண்டாம். விரைவில் நான் நாடு திரும்புவேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 
ராகுல் காந்தியை விமர்சித்து வலைதளங்களில் பாஜகவினர் பல கருத்துகளை வெளியிடுகின்றனர். எனவே, இவர்களை கிண்டல் செய்யும் விதமாக டிவிட்டரில் ராகுல் இவ்வாறு கூறியுள்ளார்.