1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 17 அக்டோபர் 2022 (18:17 IST)

ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி உடனடியாக நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் எம்.பி.

Rahul
ஒற்றுமை நடைபயணத்தை ராகுல்காந்தி உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று செய்த ராகுல் காந்தி அதன்பின் ஒற்றுமை நடை பயணத்தை தொடர்ந்தார். இந்த நிலையில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய பகுதிகளில் மக்களிடையே ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் ராகுல்காந்தியின் பிரச்சாரத்தால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும் என்றும் எனவே அவர் ஒற்றுமை நடை பயணத்தை நிறுத்திவிட்டு பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி பிரான்சிஸ்கோ என்பவர் தெரிவித்துள்ளார்
 
ஆனால் ராகுல் காந்தி தனது ஒற்றுமை நடை பயணத்தை தொடர்ந்து நடத்த விரும்புவதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
Edited by Siva