அவசரமாக இறங்கிய ஹெலிகாப்டர்!: லோக்கல் பசங்களோடு கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி – வைரல் வீடியோ!
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் அவசரமாக இறங்கியதால் பக்கத்து கிரவுண்டில் உள்ள பசங்களோடு கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி பணி நிமித்தமாக ஹெலிகாப்டர் மூலமாக மஹேந்திரகருலிருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வானிலை இடர்பாட்டால் அவசரமாக ஹெலிகாப்டர் ரெவாரி பகுதியிலுள்ள ஒரு தனியார் கல்லூரி மைதானத்தில் தரையிறக்கப்பட்டது.
ராகுல் காந்தி வந்திருப்பது தெரிந்ததும் அந்த பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் பலர் அவரை காண கூடியிருக்கிறார்கள். ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய அவரோ மைதானத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அவர்களோடு விளையாட சென்று விட்டார். இளைஞர்களோடு இளைஞராக அவர் கிரிக்கெட் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
வானிலை சரியானவுடன் மக்களிடம் விடைபெற்று கொண்டு மீண்டும் புறப்பட்டார் ராகுல் காந்தி. ஆனால் ஹரியானாவில் தேர்தல் நடக்க இருக்கும் இந்த சமயத்தில் இப்படி திடீரென ஹரியானா பகுதி ஒன்றில் தறையிறங்கி கிரிக்கெட் விளையாடுவது அரசியல் ஸ்டண்ட்டாக இருக்கலாம் எனவும் அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.