திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2017 (14:35 IST)

பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த ராகுல்காந்தி:

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி தற்போது குஜராத் மாநிலத்தில் தீவிர சுற்றுப்பயணத்தில் உள்ளார். விரைவில் அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க தீவிரமாக உள்ளது.


 


இந்த நிலையில் இன்று காலை குஜராத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள ராகுல்காந்தி சென்றிருந்தார். அப்போது கழிவறைக்கு செல்ல நினைத்த அவர் திடீரென பெண்கள் கழிவறைக்குள் நுழைந்துவிட்டார். கழிவறைக்கு முன் ஆண், பெண் என குஜராத்தி மொழியில் மட்டுமே எழுதியிருந்தது. குஜராத்தி மொழி தெரியாத ராகுல்காந்தி தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் நுழைந்து பின்னர் தவறை உணர்ந்து உடனே வெளியேறிவிட்டார்.

ராகுல்காந்தி என்ன தவறு செய்வார் என்று கண்கொத்தி பாம்பாக நோட்டமிட்டு வரும் பாஜகவினர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பெரும் வரப்பிரசாதமாக கிடைக்க சமூக வலைத்தளங்களில் ராகுல்காந்தியை வச்சு செய்கின்றனர். அதை எதிர்கொள்ள முடியாமல் காங்கிரஸ் தொண்டர்கள் பரிதாபத்தில் உள்ளனர்,.