1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 3 ஆகஸ்ட் 2022 (19:47 IST)

ராகுல்காந்தி இந்தியாவின் பிரதமர் ஆவார்: கர்நாடக சாமியார் ஆரூடம்!

rahul pm
ராகுல்காந்தி இந்தியாவின் பிரதமர் ஆவார்: கர்நாடக சாமியார் ஆரூடம்!
ராகுல் காந்தி விரைவில் இந்தியாவின் பிரதமராவார் என கர்நாடக மாநிலத்தை சேர்ந்த துறவி ஒருவர் ஆரூடம் கூறியுள்ளார்
 
 கர்நாடக மாநில முன்னாள் முதல் அமைச்சர் சித்தராமையா வின் 75வது பிறந்தநாள் விழாவில் ராகுல் காந்தி இன்று கலந்து கொண்டார்
 
 இந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீ முருக ராஜேந்திர மடத்திற்கு சென்றார் 
 
அங்கு உள்ள பிரபல துறவி நீங்கள் நிச்சயம் இந்தியாவின் பிரதமர்கள் என்று ஆசீர்வதித்தார் அப்போது மற்றொரு துறவி இது அரசியல் மேடை அல்ல என்றும் பிரதமர் யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்றும் கூறினார். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது