வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 1 அக்டோபர் 2020 (16:31 IST)

தடையை மீறிச் சென்றதால் லத்தியால் தாக்கப்பட்டு, கைதான ராகுல்காந்தி !

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த இளம்பெண் 15 நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது மறைவு உத்தரபிரதேச மாநிலத்தை மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இளம்பெண்ணின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை சட்டப்படி கடுமையாக தண்டிக்க பிரதமர் மோடி, உபி முதல்வருக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வழக்கம் போல் இந்த இளம்பெண்ணின் மரணமும் அரசியலாக்கப்பட்டு பல அரசியல் கட்சி தலைவர்கள் அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது

அந்த வகையில் ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமையில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேசத்தில் பயணம் செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்குவேண்டி 2,3 தினங்கள் ஆனாலும் அங்கு நடந்து செல்வதாக நொய்டாவிலிருந்து செல்லும் ராகுல் காந்தியும் பிரியாகாந்தியும் கூறினர்.

இந்நிலையில்,தடையை மீறி சென்றதாக ராகுல்காந்தியை போலீஸார் கைது செய்தனர். மேலும் தன்னைத் தள்ளிவிட்டு லத்தியால் தாக்கியதாகவும் ராகுல் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறிது காவல்துறையினர், தொற்று நோய்த் தடுப்புச் சட்டப்படி ராகுல், பிரியங்காவை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.