வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (12:55 IST)

மருதநாயகத்தை பார்க்க வந்ததுதான் கடைசி..! – ராணி எலிசபெத் இந்திய பயணங்கள்!

Elizebeth India visit
இங்கிலாந்தின் மகாராணியாக 70 ஆண்டுகள் ஆட்சி செய்த இரண்டாம் எலிசபெத் உயிரிழந்த நிலையில் அவரது இந்திய பயணங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி குறிப்பு

இங்கிலாந்தின் மகாராணியாக கடந்த 70 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்தவர் இரண்டாம் எலிசபெத். 96 வயதான ராணி எலிசபெத் தற்போது உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். உலகிலேயே அதிக காலம் அரியணையில் வீற்றிருந்த மகாராணி என்று ராணி எலிசபெத் சாதனை படைத்துள்ளார்.


70 ஆண்டு காலம் மகாராணியாக விளங்கிய இரண்டாம் எலிசபெத் இதுவரை மூன்று முறை இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார். முதன்முறையாக ராணி எலிசபெத் இந்தியா சுதந்திரமடைந்து 17 ஆண்டுகள் கழித்து 1961ல் இந்தியா வந்தார். எலிசபெத்தின் தாத்தாவான அரசர் ஜார் மற்றும் ராணி மேரி 1911ல் இந்தியாவிற்கு தங்கள் முதல் பயணத்தை தொடர்ந்தனர்.
Elizebeth India visit

அதை தொடர்ந்து 50 ஆண்டுகள் கழித்து ராணி எலிசபெத்தின் இந்த பயணம் நடந்தது. 1961ல் பிரதமராக இருந்த நேரு மற்றும் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் அழைப்பின் பேரில் இந்தியா வந்த ராணி எலிசபெத், இந்தியாவின் சுதந்திர தின விழாவிலும் கலந்து கொண்டார்.


தனது முதல் பயணத்தின் போது ஆக்ரா, தாஜ்மஹால், ஜெய்பூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இரண்டாம் எலிசபெத் பயணம் மேற்கொண்டார். பின்னர் 1983ல் இந்தியா வந்த எலிசபெத் அப்போதைய பிரதமரான இந்திரா காந்தியை சந்தித்தார். பின்னர் பஞ்சாபின் தங்க கோவிலுக்கு பயணம் செய்தார்.
Kamal Elizebeth II


1997ல் இந்தியா வந்த ராணி எலிசபெத் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார். அதன் ஒருபகுதியாக சென்னையில் கமல்ஹாசனின் மருதநாயகம் படத்திற்கான படிப்பிடிப்பில் கலந்து கொண்டார். அங்கு 20 நிமிடங்களை செலவழித்தார். ராணி எலிசபெத் தனது இந்திய பயணத்திலேயே கலந்து கொண்ட ஒரேஒரு படபிடிப்பு இதுவே ஆகும்.