வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2022 (11:36 IST)

பூரி ஜெகந்நாதர் ரதயாத்திரை திருவிழா! – ஒடிசாவில் குவிந்த மக்கள்!

Puri Jegannath Temple
இன்று பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை நடைபெறும் நிலையில் அதை காண பல மாநில மக்களும் ஒடிசாவில் குவிந்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோவில் நாடு முழுவதும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ரதயாத்திரையை காண பல மாநில மக்களும் வருகை தருவது வாடிக்கை.

இன்று பூரி ஜெகந்நாதர் கோவில் ரதயாத்திரை தொடங்கும் நிலையில் மக்கள் பலரும் பூரியில் குவிந்துள்ளனர். தேரை வடம்பிடித்து இழுக்க மக்கள் அனைவரும் போட்டிப் போட்டுக் கொள்ளும் நிலையில் இடையூறுகள் இல்லாமல் தேரோட்டத்தை நடத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.