செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (19:10 IST)

பஞ்சாபில் அமைச்சர் ராஜினாமா!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து.

சமீபத்தில் அம்மாநிலத்தில் ஏற்பட்ட முதலமைச்சர் தேர்வு, அமைச்சரவை உருவாக்கத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதேபோல் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்  காங்கிரஸுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இன்று பாஜகவில் சேரவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

 இந்நிலையில், தற்போது பஞ்சாபில் 2 தினங்களுக்கு முன்பு அமைச்சராகப் பதவியேற்ற ரசியா சுல்தானா ராஜினாமா செய்துள்ளார். மேலும் சித்துவுக்கு ஆதரவாக இவர் பதவில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.