ஈ அடிக்கும் தடுப்பூசி முகாமுக்கு ஏகப்பட்ட பில்டப்..??
நாடு முழுவதும் 2.24 லட்சத்துக்கு அதிகமானோருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல்.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் 1 கோடியை தாண்டியுள்ள நிலையில் அவசர கால தடுப்பூசியாக கோவாக்சின் மற்றும் கோவுஷீல்டை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகள் ஆரம்ப கட்டமாக முன்கள பணியாளர்கள்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் பல முன்கள் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டாததாக தெரிய வந்துள்ளது. ஆனால், மத்திய சுகாதார அமைச்சகமோ, கடந்த 2 நாட்களில் நாடு முழுவதும் 2.24 லட்சத்துக்கு அதிகமானோருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல் வெளியிட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக முதல் நாளில் மட்டும் 2,07,229 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் எனவும் இந்த 2 நாட்களில் வெறும் 447 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்ட பின் பக்க விளைவுகள் ஏற்பட்டன எனவும் தெரிவித்துள்ளது.