வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 16 ஜனவரி 2021 (17:02 IST)

Ground Report: கொரோனா தடுப்பூசி யாருக்கு போடலாம், யாருக்கு போடக்கூடாது?

கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் துவங்கியுள்ளது. 

 
நாடு முழுவதும் 3006 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைப்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பூசி யாருக்கு போடலாம், யாருக்கு போடக்கூடாது? தெரிந்துக்கொள்ளுங்கள்... 
 
1. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போட வேண்டும். 
2. ஒரு டோஸ் தடுப்பு மருந்து கொடுத்தால் அதன் பிறகு 14 நாட்கள் கழித்தே அடுத்த டோஸ் கொடுக்க வேண்டும். 
3. முதல் டோசில் எந்த வகை தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதோ, அதே தடுப்பு மருந்துதன் இரண்டாவது டோசிலும் கொடுக்கப்பட வேண்டும். 
4. கொரோனா தடுப்பு மருந்து முதல் டோசின் போது ஒவ்வாமை ஏற்பட்டால் அடுத்த தடுப்பூசி போடக்கூடாது. 
5. கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கூடாது. 
6. கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள், பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது. 
7. நோயால் உடல்நலம் குன்றி மருத்துவமனைகளில் இருப்பவர்களும் தடுப்பூசி போடக்கூடாது.