வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (16:53 IST)

எனது வெற்றிக்கு பிரதமர் மோடி மோடி காரணமில்லை- அதானி

உலகப் பணக்காரர்களின் பட்டியலில் டாப் 10 பட்டியலில் உள்ள அதானி தன் வெற்றிக்கு பிரதமர் மோடி காரணமில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்கார் கெளதம் அதானி. இவர் துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைத்தொடர்பு எனப் பல துறைகளிலும் வெற்றி பெற்று முன்னணி தொழிலதிபராக வலம் வருகிறறார்.

இவர், இந்தியாவில் கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த அம்பானியை பின்னுக்குத்தள்ளி ஆசியாவிலும் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில்  முதலிடம் பிடித்தார்.

137.4 பில்லியன்  டாலருக்கும் அதிகமான  சொத்து மதிப்புடன் பெரும் செல்வந்தராகவும் தொழிலதிபராகவும்  இருக்கும் அதானியின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடிதான் காரண என விமர்சனம் உண்டு.

இந்த நிலையில், இதுகுறித்து அதானி முதன் முறையாக ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில்,  நானும் , பிரதமர் மோடியும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். என்  தொழில் வளர்ச்சிக்கு ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த காங்கிரஸ் ஆட்சியின்போது இருந்த கொள்கைகள் காரணம் எனவும், நரசிம்ம ராவ் (1991)பிரதமராக இருந்தபோது கொண்டு வந்த பொருளாதாரம்  மாற்றம் மற்றும் வெவ்வேறு காலத்தில் பல அரசியல் தலைவர்கள் கொண்டு வளர்ச்சியால்  மற்ற தொழிலதிபர்களைப் போல்   நானும் பலனடைந்தேன். இதற்கு தனிப்பட்ட தலைவர்  யாரும் காரணமில்லை என்று தெரிவித்துள்ளார்.