1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 10 டிசம்பர் 2022 (16:44 IST)

இந்த ஆண்டின் ரியல் சக்ஸஸ் மீட் இதுதான்… லவ்டுடே படக்குழு மகிழ்ச்சி!

இப்போது கிட்டத்தட்ட தன்னுடைய திரையரங்க காலத்தை நிறைவு செய்துள்ள லவ் டுடே திரைப்படம் உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாகபஸ்டர் படமாக லவ் டுடே அமைந்துள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் அங்கும் நல்ல கலெக்‌ஷனை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்போது படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், படத்தில் கதாநாயகனாக நடிக்க இந்தி நடிகர் வருண் தவானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளனர். பல படங்கள் ரிலீஸ் ஆகி அடுத்த நாளே சக்சஸ் மீட் செய்யும் நிலையில், உண்மையான வெற்றியின் மூலம் சக்ஸஸ் மீட் வைத்துள்ளனர்.