1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2019 (07:50 IST)

மனைவியுடன் வெளிநாடு தப்ப முயன்ற டிவி அதிபர் மும்பையில் தடுத்து நிறுத்தம்!

என்.டி.டி.வி அதிபர் மீது பணமோசடி புகார் ஒன்று இருக்கும் நிலையில் அவர் மனைவியுடன் விமான வெளிநாடு செல்ல முயன்ற போது விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
என்.டி.டி.வி டிவி சேனல் உரிமையாளர் பிரனாய்ராய் தனது மனைவி ராதிகா ராய் அவர்களுடன் வெளிநாடு செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவர் விமான நிலையத்திற்கு வந்திருப்பதை அறிந்த சிபிஐ அதிகாரிகள் விமான நிலைய அதிகாரிகளிடம் அவர்களை தடுத்து நிறுத்துமாறு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவியை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர் 
 
இது குறித்து என்டிடிவி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது: இது போன்ற நடவடிக்கை ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரானது. ஊடகங்களை மிரட்டும் நோக்கில் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 
 
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியபோது 'பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய்இருவரும் வெளிநாடு செல்வதற்காக மும்பை விமான நிலையம் வந்திருந்தனர். அவர்களிடம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி இந்தியா திரும்புவதற்கான டிக்கெட்டும் இருந்தது. இருப்பினும் சிபிஐ அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்கள் இருவரிடமும் விசாரணை செய்தோம். விசாரணைக்கு இருவரும் ஒத்துழைப்பு அளித்தனர் என்று கூறினர்
 
முன்னதாக என்.டி.டி.வி  உரிமையாளர் பிரனாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன் வங்கி கடன் பெற்று பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்திருந்தது. இதனை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் என்.டி. டி.வி. சேனல் சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.