1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 26 டிசம்பர் 2017 (14:55 IST)

அமைச்சராக இருந்துக்கொண்டு இப்படி கீழ்தரமாக பேசலாமா? கொந்தளித்த பிரகாஷ்ராஜ்

மதச்சார்பற்றவர்களின் ரத்தைத்தயும், பிறப்பையும் கேவலப்படுத்துவதா என நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டேவை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.

 
கார்நாடக மாநிலம் கெப்பல் மாவட்டத்தில் நடைபெற்ற பிராமணர் இளைஞர் சங்க நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டே சர்ச்சையாக கருத்தை கூறியுள்ளார். அவர், ஒரு முஸ்லிம் தன்னை முஸ்லிம் என்றும், கிறிஸ்துவர் தன்னை கிறிஸ்துவர் என்றும், பிராமணர் தன்னை ஒரு பிராமணர் என்றும் பெருமையாக கூறிக் கொண்டால் எனக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் அவர்களின் ரத்தம் என்ன என்பது அவர்களுக்கு தெரியும்.
 
ஆனால் மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை. அவர்கள் என்ன ரத்தம் என்று தெரியாமல், அடையாளங்கள் இல்லாமல் இருக்கின்றனர் என்று கூறினார்.
 
இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதில்,
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சர் இவ்வளவு கீழ்த்தரமாக பேசுவது வேதனையளிக்கிறது. ரத்தம் மனிதனின் ஜாதி, மதத்தை நிர்ணயிக்காது. மதச்சார்பின்னமை, எந்த மதத்தையும் சார்ந்து இல்லை என்று அர்த்தமில்லை. எல்லா மதத்தையும் மதித்து ஏற்றுக்கொள்ளுதல் என்று தெரிவித்துள்ளார்.