அஞ்சல் தேர்வுகள் ரத்து: நன்றி தெரிவித்த மதுரை எம்பி சு.வெங்கடேசன்!
பொங்கல் விடுமுறையில் நடைபெற இருந்த அஞ்சல் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து மதுரை எம்பி சு.வெங்கடேசன், நன்றி தெரிவித்துள்ளார்.
ஜனவரி 15, 16 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் அஞ்சல் தேர்வுகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் நேரத்தில் தேர்வுகள் வைப்பது எந்த அளவுக்கு நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி பொங்கல் விடுமுறையில் நடைபெற இருந்த அஞ்சல் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் முடிவுகளை கைவிடுங்கள் என இந்தியா போஸ்ட் இயக்குனருக்கு கடிதம் எழுதியிருந்தேன் என்றும் கொரோனா காரணங்களை சுட்டிக்காட்டி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன என்றும் அதற்கு நன்றி என்றும் மதுரை எம்பி சு.வெங்கடேசன், என்று தெரிவித்துள்ளார்