திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 25 நவம்பர் 2024 (07:34 IST)

நாளை தான் கடைசி தினம்.. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியா?

மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபை காலம் நாளைக்குள் முடிவடைவதால், முதல்வர் யார் என்று முடிவு செய்து நாளைக்குள் பதவி ஏற்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில், பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், புதிய அரசு நாளைக்குள் பதவி ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டாலும், நாளைக்குள் புதிய அரசு அமைக்க வாய்ப்பு இல்லை என்று மகாராஷ்டிரா அரசியல் நிலவரங்கள் கூறுகின்றன.
 
ஒருவேளை நாளைக்குள் புதிய முதல்வர் பதவி ஏற்க வில்லை என்றால், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தாலும், மகாராஷ்டிராவில் இதற்கு முன்னதாக சட்டசபை காலம் காலாவதியான நிலையிலும் சில நாட்கள் கழித்து அரசு அமைக்கப்பட்டதற்கு உதாரணமாக உள்ளது.
 
ஏற்கனவே சில முறை தாமதமாக பதவி ஏற்கப்பட்டுள்ள நிலையில், இந்த முறையும் முதல்வர் பதவி ஏற்க கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. எனவே, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றும், இருப்பினும் இன்னும் ஒரு சில நாட்களில் புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
சிறப்பு அனுமதி பெறப்பட்டு, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்க சில நாட்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படும் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Siva