காங்கிரஸில் சேர்ந்தார் பிரபல கிரிக்கெட் கேப்டன் : தொண்டர்கள் கொண்டாட்டம்
தெலங்கானா மாநிலத்தில் செயல்தலைவராக முன்னாள் கிருக்கெட் வீரர் முகமது அசாருதீன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
மொத்தம் 119 மாநில தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி சட்டபேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. பிறகு 11 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் தெலங்கானா மா காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இந்திய கிர்க்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனை அக்கட்சியின் தலைமை நியமித்திருக்கிறது.
ஏற்கனெவே அசாருதீன் கடந்த 2009 ஆம் ஆண்டில் உத்தரபிரதேசத்தில் மொராபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
பிறகு 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ராஜஸ்தானில் டோங் - சவேரி மாதேப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை அடைந்தார்.
இந்நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலில் ,காங்கிரஸ் அசாருதினை தெலங்கா மாநில செயல்தலைவர் ஆக்கியுள்ளதால் அம்மாநில காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.