புளூவேல் விளையாட்டில் மேலும் ஒரு மாணவர் பலி...
புளுவேல் விளையாட்டின் மூலம் புதுச்சேரியை சேர்ந்த மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் புளூவேல் விளையாட்டால் இளைஞர்கள் தற்கொலை செய்து வரும் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக இந்திய சிறுவர், சிறுமிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இதற்கு அடிமையாகி வருகின்றனர்.
இந்த நிலையில் புளூவேல் விளையாட்டை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கேரள முதல்வர் முதல் பல தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தமிழகத்தை பொருத்தவரையில் ஆட்சியை தக்க வைக்கவும் பாதுகாக்கவுமே நேரம் போதவில்லை என்பதால் மக்களின் பிரச்சனைகளை குறிப்பாக புளூவேல் விளையாட்டு குறித்து பேசுவதற்கே ஆளும் அரசியல்வாதிகளுக்கு நேரமில்லாமல் உள்ளது.
இந்த நிலையில் மதுரை திருமங்கலம் மொட்டைமலையை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் இந்த விளையாட்டை தொடர்ந்து 1,615 மணி நேரம் விளையாடி கடைசி டாஸ்க்கான தற்கொலை டாஸ்க் வரை வந்து நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் எம்.எபி.ஏ. முதலாமாண்டு படித்துவரும் மாணவர் சசிகுமார், இந்த புளூவேல் விளையாட்டை விளையாடி, கல்லூரி விடுதி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகம் மற்றும் அதற்கு அருகில் இருக்கும் மாநிலங்களில், இந்த விளையாட்டை விளையாடி தொடந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதால் மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.