திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 6 ஜூலை 2017 (14:19 IST)

கணவனின் மரணத்தை தாங்க முடியால் புதுப்பெண் தற்கொலை...

திருமணமாகி 2 மாதங்களே ஆகிய நிலையில், கணவனின் மரணத்தை தாங்க முடியாமல், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தானே மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம், அம்பர்நாத் பகுதியில் வசித்து வந்தவர் சங்கீத்(25). இவர் திவ்யா (20) என்ற பெண்ணை 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அந்நிலையில், கடந்த 2 இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ரயில் விபத்தின் காரணமாக, அடிக்கடி அவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த சங்கீத் கடந்த 29ம் தேதி வீட்டிலேயே மனைவியின் சேலையை பயன்படுத்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
இந்நிலையில், கணவனின் துக்கத்தை தாங்க முடியாமல் தவித்த திவ்யா மிகுந்த மன உளைச்சளில் இருந்துள்ளார். எனவே, அவரும் அதே வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
 
திருமணமான 2 மாதத்திலேயே கணவன் மற்றும் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அவரது குடும்பத்தினர் மற்றும் அம்பர்நாத் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.