1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 18 ஜூலை 2016 (22:56 IST)

காவல் துறையினருக்கு இனி வாரம் ஒருநாள் விடுமுறை

புதுச்சேரியில் பீட் (ரோந்து) காவல்துறையினருக்கு வார விடுமுறை அளிக்கப்பட உள்ளது என துணை நிலை ஆளுநர் அறிவித்துள்ளார்.
 

 
புதுச்சேரியில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் ரோந்து காவல்துறையினருக்கு பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
 
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கிரண்பேடி, ”தற்போது காவல் பணிகள் முற்றிலும் மாறிவிட்டது. பொதுமக்களை காவல்துறையினர் கண்காணிக் கின்றனர். பொது மக்களும் காவல்துறையினரை கண்காணிக்கின்றனர். பொது மக்களுக்கு விரைவான தீர்வு தேவைப்படுகிறது.
 
பீட் காவல்துறையின் பணிகள் குறித்தும் அவர் களுக்கு என்ன தேவை என்றும் அவர்களிடம் கருத்துகேட்டேன். அதற்கு பதிலளித்த சிலர் காவல்துறையினருக்கு வார விடுமுறை வேண்டும் என்றனர். அவர்களுக்கு வார விடுமுறை வழங்க நான் ஆதரவு தருகிறேன். இதுபற்றி டிஜிபி தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
 
ஆளுநர் இந்த அறிவிப்பை வெளியிட்டதும் மேடையில் இருந்த காவல் துறை டி.ஜி.பி. சுனில்குமார், பீட் காவல்துறையினருக்கு உடனடியாக வார விடுமுறை வழங்குவதாக அறிவித்தார்.
 
இதுபற்றி கூறிய அவர், 'முதலில் பீட் காவல்துறையினருக்கு மட்டும் வார விடுமுறை வழங்கப்படும். மற்ற காவல்துறையினருக்கும் வார விடுமுறை வழங்குவது தொடர்பாக பின்னர் முடிவு எடுக்கப்படும்' என்றார்.