என்கவுண்டர்களில் 2 ரவுடிகளை சுட்டுக்கொன்ற போலீஸார்
உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 2 ரவுடிகளை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் நாளுக்கு நாள் சட்ட விரோதமான செயல்களும், குற்றச் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெண்கள் பலர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றன்ர். இதன் மூலம் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக பெயர் எடுத்துள்ளது உத்திரபிரதேசம்.
இந்நிலையில் ஷ்ராவன் சவுத்திரி என்ற ரவுடி டெல்லி மற்றும் நொய்டாவில் நடந்த பல கொலைகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவன். போலீஸார் நடத்திய என்கவுண்டர்களில் இவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அதேபோல் தாத்ரி என்ற இடத்தில் ஜிதேந்தர் என்ற குற்றவாளி பதுங்கி இருந்தான். அவனது இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீஸார், அவனை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.