என்கவுண்ட்டர் செய்த போலீஸார் மீது வழக்கு பதிவு??
தெலுங்கானா பெண் மருத்துவர் கொலை தொடர்பாக குற்றவாளிகளை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்ற போலீஸார் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தில் மனு.
தெலுங்கானா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகள் விசாரணை செய்ய சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றபோது தப்பிக்க முயன்றதாக போலீஸார் என்கவுண்ட்டர் செய்தனர். இந்த செயலை பலரும் சரியான தண்டனை என கொண்டாடி வருகின்றனர். எனினும் பலர் இது மனிதநேய செயல் அல்ல என கண்டித்து வந்தனர்.
இந்நிலையில் என்கவுண்ட்டர் செய்த போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இருவர் மனு அளித்துள்ளனர்.