1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 12 அக்டோபர் 2016 (10:38 IST)

பிரதமர் மோடியை கிண்டலடிக்கும் ராமதாஸ்!

பிரதமர் மோடியை கிண்டலடிக்கும் ராமதாஸ்!

பிரதமருக்கு விடுமுறை கிடையாது 365 நாட்களும் பணியாற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்ததை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கிண்டலடித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


 
 
பிரதமர் நரேந்திர மோடி பல நாடுகளுக்கு சென்று வருகிறார். அனைத்தும் அதிகாரப்பூர்வமான, அரசுமுறை பயணம். பல நாடுகளுடன் நட்புறவை பேணி வருகிறார். இந்தியாவில் முதலீடுகள் செய்ய பல வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் வைக்கிறார்.
 
பல நாடுகளுடன் பல ஒப்பந்தங்கள் அவரது வெளிநாட்டு பயணத்தின் போது கையெழுத்தாகிறது. இந்நிலையில் அவரது வெளிநாட்டு பயணங்களை எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தனர். நாட்டில் இவ்வளவு பிரச்சனை இருக்கிறது, ஆனால் பிரதமர் நாடு நாடாக சுற்றுகிறார். பிரதமரை இந்தியா அழைத்து வாருங்கள் என பல விமர்சனங்கள் வைத்தனர்.
 
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை எனவும் பிரதமருக்கு விடுமுறை கிடையாது 365 நாட்களும் பணியாற்ற வேண்டும் என மத்திய அரசு கூறியிருந்தது.

 
இதனை கிண்டலடிக்கும் விதமாக பாமக நிறுவனவர் மருத்துவர் ராமதாஸ் சுற்றுலா செல்வதற்கு எதற்கு விடுமுறை என பதிவிட்டு பிரதமரின் வெளிநாட்டு பயணங்களை சுற்றுலா என கிண்டலடித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து பின்னர் கூட்டணியில் இருந்து பாமக விலகியது குறிப்பிடத்தக்கது.