திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (13:04 IST)

இனி ஏடிஎம்மை தேடி அலையத் தேவையில்லை: பிரதமர் மோடி

Modi
இனி ஏடிஎம்மை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை என பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இது குறித்து அவர் மேலும் பேசியதாவது:
 
டிஜிட்டல் பண பரிவர்த்தனையால் பணம் எடுத்துச் செல்லவோ, ஏடிஎம்மை தேடி அலையத் தேவையில்லை என்றும் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தாமல் ஒரு நாள் முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவத்தை உணர வேண்டும் என்றும் அவர் கூறினார் 
 
கடந்த மார்ச் மாதத்தில் ரூபாய் 10 லட்சம் கோடி டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடந்துள்ளது என்று நாள்தோறும் ரூபாய் 20,000 கோடி ஆன்லைன் பண பரிவர்த்தனை நடைபெறுகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார் 
சிறிய உணவகங்கள், பழக்கடைகளில் கூட டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யப்படுகிறது என்றும்  டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.