Daily Horoscope
✕

உண்மையை வெளிப்படுத்தியதால் இண்டியா கூட்டணியில் பீதி: பிரதமர் மோடி பேச்சு

Written By Mahendran
Updated: செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (15:18 IST)
இஸ்லாமியர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பிரதமர் மோடி பேசியதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நான் உண்மையை பேசியதால் இந்தியா கூட்டணியினர் பீதி அடைந்துள்ளனர் என்று ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ராஜஸ்தானில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது மக்களின் சொத்துக்களை பறித்து காங்கிரஸ் தனது ஸ்பெஷல் ஆட்களுக்கு விநியோகம் செய்ய சதி செய்கிறது என்ற உண்மையை நான் வெளிப்படுத்தினேன், இதனால் ஒட்டுமொத்த காங்கிரஸ் மட்டும் இந்தியா கூட்டணி பீதி அடைந்துள்ளது என்று தெரிவித்தார். 
 
மேலும் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி அரசியலை நான் அம்பலப்படுத்திய போது அவர்கள் என்னை திட்டும் அளவுக்கு கோபமடைந்தார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் ஏன் உண்மையை கண்டு பயப்படாதீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
பிரதமர் மோடியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும் அதை உறுதி செய்வது போல் பிரதமர் மோடி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

மின்சாரம் விலை!.. ஆந்திராவை விட தமிழகத்துக்கு அதிகம்.. நடந்தது என்ன?..

தீபாவளி பண்டிகை!.. 95 சிறப்பு ரயில்கள் இயக்கம்!.. ரயில்வே நிர்வாகம் தகவல்!...

ரயில்களில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டா 6 மாசம் ஜெயில்!.. பொதுமக்கள் உஷார்!..

மகிந்த ராஜபக்ச கவலைக்கிடம்!.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!...

பிஎம்டபிள்யூ கார் தீப்பற்றி எரிந்த வழக்கு: 14 ஆண்டுகளுக்கு பின் அதிரடி தீர்ப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments