திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 நவம்பர் 2022 (09:07 IST)

ஒரே பூமி.. ஒரே குடும்பம்.. ! – ஜி20 மாநாடு இலச்சினையை வெளியிட்ட பிரதமர் மோடி!

G20
அடுத்த ஆண்டு ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான இலச்சினையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் ஜி20 நாடுகளின் மாநாடு ஒவ்வொரு நாட்டில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஜி20 மாநாடு நவம்பர் 15ல் இந்தோனேஷியாவில் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்கிறது. அடுத்த ஆண்டு ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்தியா ஜி20 அமைப்புக்கு தலைமையேற்பதால் இந்தியா புதிய இலச்சினையை வெளியிட்டுள்ளது. தாமரை மலரின்மேல் பூமி உள்ளது போல இந்த இலச்சினை அமைக்கப்பட்டுள்ளது. இதை நேற்று பிரதமர் மோடி வெளியிட்டார்.
பின்னர் பேசிய அவர் “ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குவது நாட்டின் அனைத்து மக்களுக்கும் பெருமை அளிக்கும் ஒன்றாகும். இது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும்” என கூறியுள்ளது.

Edited By Prasanth.K