திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 11 நவம்பர் 2023 (18:35 IST)

விஸ்வரூப மகாசபா மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

MODI
தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா மாவட்டம், ஹைதராபாத்தில்

மாதிக (அருந்ததியர்) இடஒதுக்கீடு போராட்ட இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்துள்ள பிரமாண்ட  விஸ்வரூப மகாசபா மாநாட்டில் பாரத பிரதமர் மோடி இன்று கலந்து கொள்கிறார்.

இதுகுறித்து  மாநில பாஜக  தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது:

‘’மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  நரேந்திரமோடி அவர்கள் நல்லாட்சியில், நாடு முழுவதும் அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய முக்கியத்துவமும் பிரதிநிதித்துவமும் கிடைக்கப்பெற்று வருகின்றன. நமது நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளில், பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அமைச்சரவையில்தான், அருந்ததியர் சமூகத்திற்கும் மாதிக சமூகத்திற்கும், பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது. இரு பெரும் சமூகத்தின் பிரதிநிதிகளாக மாண்புமிகு மத்திய இணையமைச்சர்கள் அண்ணன் முருகன் அவர்களும், திரு. A. நாராயணசுவாமி அவர்களும், மத்திய அமைச்சரவையை அலங்கரிக்கிறார்கள்.

மத்திய அமைச்சரவையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 12 அமைச்சர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள். பட்டியல் சமூக மக்கள் முன்னேற்றத்திற்காக, மத்திய அரசின் இந்த ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீடு, 1.59 லட்சம் கோடி ரூபாய் ஆகும். ஆண்டு தோறும் இந்த ஒதுக்கீடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

நாடு முழுவதும் பட்டியல் சமூக மக்கள் வாழ்வியல் முன்னேற்றத்துக்காகத் தொடர்ந்து நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  நரேந்திரமோடி அவர்கள், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடைபெறும், மாதிக சமூக மக்களின் விஸ்வரூப மகாசபா மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.