ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் கட்டணம் உயர்வு! மக்கள் கடும் எதிர்ப்பு
கடந்தாண்டு கொரொனா உலகம் முழுவதும் பரவியதை அடுத்து, இந்தியா உள்ளிட்ட நாட்டுகள் ஊரடங்கு உத்தவுகள் விதித்தன. இந்தியாவில் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொரோனாவில் இரண்டாவது அலை மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதால், இதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், ரெயில் நிலையங்களில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளாது.
மும்பை உள்ளிட்ட சில குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் டிக்கெட் கட்டணம் ரூ.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்குக் கடும் எதிர்ப்புகள் குவிந்து வருகிறது.
தற்போது மும்பை டிவிஷனுக்கு உட்பட்ட 78 ரயில் நிலையங்கல்லில் அதிக பயணிகள் வந்து செல்கின்ற 7 நிலையங்களில் மட்டுமே இந்த கட்டண உயர்வுகொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.