செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 20 ஜூலை 2021 (17:27 IST)

ரூ.120ஐ நெருங்கிய பெட்ரோல்: பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல் விலை கடந்த சில நாட்களுக்கு முன்னரே ஒரு லிட்டர் ரூபாய் 100ஐ கடந்து விட்டது என்பதை பார்த்தோம். அதேபோல் டீசல் விலை ரூபாய் 100 நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ஒன்றுக்கு ரூ.110க்கும் மேல் சென்று விட்டது என்பதும் 120 ரூபாயை கிட்டத்தட்ட நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110.20 என்றும், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.83 என்றும், ஹைதராபாத்தில் பெட்ரோல் ரூ.105.83 என்றும், பெங்களூருவில் பெட்ரோல் ரூ.105.25 என்றும், சென்னையில் பெட்ரோல் ரூ.102.49 என்றும், டில்லியில் பெட்ரோல் ரூ.101.84 என்றும் விற்பனை செய்யப்படுகிறது. 
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வதால் பணக்காரர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வதால் நடுத்தர ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கடுமையான பாதிப்பு நிலவுவதால் பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தாலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்தால் பெருமளவு பெட்ரோல் டீசல் விலை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது