புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 15 பிப்ரவரி 2021 (06:45 IST)

இந்திய வரலாற்றில் முதல்முறையாக சதமடித்த பெட்ரோல் விலை!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இது குறித்து கடுமையான தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இருப்பினும் தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து கொண்டே இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை சதமடித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பர்பானி என்ற மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் 14 காசுகள் என விற்பனை ஆவதாக தகவல்கள் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னையை பொருத்தவரை இன்று பெட்ரோல் விலை ரூபாய் 91.19 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. இன்று ஒரே நாளில் பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து உள்ளது என்பதும் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை இன்று 84 ரூபாய் 44 காசுகளாக விற்பனையாகிறது என்பது குறிப்பிடதக்கது.
 
கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவது வருவதையடுத்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.