புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (16:40 IST)

தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் டீசல், மதுபானம் விலை குறைவு !

சட்டசபைத் தேர்தல் வரவுள்ளதால், அசாம் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் மதுபான விலைகள் குறைகின்றதாகத் தகவல் வெளியாகிறது.

சர்வதேச எண்ணெய்ச் சந்தையில் கச்சாப் பொருட்களின் விலை குறைந்தபோதிலும் இந்தியாவில் மற்ற ஆசிய நாடுகளை விடவும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதால், பெட்ரோல், டீசல் மற்றும் மதுபான விலைகள் குறையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

அசாம் மாநிலத்தில் கொரொனா காலத்தில் ஊரடங்கு அமலில் இருந்தபோது, பெட்ரோல், டீசல் விலையில் ரூ.5 மற்றும் மதுபான விலையில் 25% அதிகரித்து மாநில அரசு உத்தரவிட்டது.

தற்போது பொதுமுடக்கம் சிலதளர்வுகளுடன் உள்ளதால்  மீண்டும் இந்த விலையேற்றம் திரும்பப் பெறுவதாக அரசு தெரிவித்துள்ளது. விரைவில் அம்மாநிலத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த உத்தரவுகள் வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.