வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (12:55 IST)

அமைச்சர் ஓட்டு போட எதிர்ப்பு! ராணுவ பாதுகாப்புடன் வந்த அமைச்சர் – உ.பியில் பரபரப்பு!

உத்தர பிரதேசத்தில் 4வது கட்ட தேர்தலில் வாக்களிக்க வந்த மத்திய இணை அமைச்சருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் இன்று 4ம் கட்ட தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் லக்கிம்பூர் மாவட்டம் பன்பீர்பூரில் உள்ள வாக்குசாவடியில் வாக்களிக்க மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா வந்துள்ளார்.

ஆனால் அவரது வருகையை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் 200க்கும் அதிகமான துணை ராணுவ படையினர் பாதுகாப்போடு வாக்குச்சாவடி சென்று தனது வாக்கை செலுத்தியுள்ளார் அஜய் மிஸ்ரா.

முன்னதாக லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தின் போது விவசாயிகளை காரை ஏற்றி கொன்ற வழக்கில் அஜய் மிஸ்ரா மகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.