1. செய்திகள்
  2. நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022
  3. கவனம் ஈர்க்கும் வேட்பாளர்கள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (11:47 IST)

தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் யார் தெரியுமா?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தனசேகரன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். 

 
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக கைப்பற்றி இருப்பது வரலாறு காணாத வெற்றியை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அக்கட்சிக்கு பெற்று தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் சென்னை மாநகராட்சி 137வது வார்டில் திமுக வேட்பாளர் தனசேகரன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் தனசேகரன் 10,578 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். தமிழகம் முழுவதும் நேற்று வாக்கு எண்ணப்பட்ட நிலையில் இவர் தான் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஆவார்.