புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 ஜனவரி 2020 (18:34 IST)

கிரிக்கெட் மைதானத்திலும் சிஏஏ போராட்டம்! – பார்வையாளர்கள் அகற்றம்!

ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான முதல் நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் சூழலில் பார்வையாளர்கள் சிலர் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 49 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் குவித்த நிலையில் அடுத்ததாக ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் கிரிக்கெட்டை பார்க்க வந்த பார்வையாளர்களில் சிலர் தங்கள் டீ-சர்ட்டுகளில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்களை எழுதியவாறு மைதானத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்களை அவர்கள் முழங்கியதை தொடர்ந்து அதிகாரிகள் சிலர் அவர்களை அப்புறப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கிரிக்கெட் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.